வியாழன், 11 நவம்பர், 2010

தமிழையும் காப்பாற்றுவோம்

 இந்த வாரம் விஜய் டிவியின் நீயா நானாவில் தமிழ் மொழியை தொழில் ரீதியாக எடுத்துக் கொள்வது பற்றிய ஒரு அருமையான தலைப்பு. அதில் ஒருவர் சொன்ன ஒரு கருத்து என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

நாம் ஆங்கிலத்தில் பேசும்போது ஏதாவது இலக்கணப் பிழை செய்தால், நம்மை சுற்றி இருப்பவர்கள் உடனே திருத்துவார்கள். ஆனால் தமிழில் இலக்கணப் பிழையாக பேசினாலோ அதை யாரும் கண்டுகொள்வதில்லை. மாறாக பல சமயங்களில் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு கிண்டல் செய்கிறோம்.

அதிலும் நம் தொலைகாட்சியில் வர்ணனை செய்யும் பெண்களின் தமிழை கேட்டால் தற்கொலையே செய்து கொள்ளலாம் போல இருக்கும். இது போக ஜுனூன் தமிழ் என்று ஒன்றை நாம் கண்டுபிடித்திருக்கிறோம். இது மகா கொடுமை!

இதெலாம் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு சில பத்திரிக்கைகளிலும் எழுத்து பிழைகள் இலக்கணப் பிழைகளோடு வெளிவருவது மிகவும் வேதனை. சினிமாவை எடுத்துக்கொண்டால் வித்தியாசமான குரலை கொடுக்கிறேன் என்ற பெயரில் தமிழே தெரியாதவர்களையும், தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க தெரியாதவர்களையும், கொஞ்சி கொஞ்சி தமிழை கொலை செய்பவர்களையும் வைத்து ரசிக்க முடியாத பாடல்களை அள்ளித் தெளிக்கிறார்கள்.

ஆங்கிலத்திற்கு நாம் செய்யும் சேவையைப்போல் தமிழிற்கும் செய்தால் தமிழை நம்மிடமிருந்து நாமே காப்பாற்றலாம். இதேபோல் சில பதிவுகளிலும், இடுகைகளிலும், மறுமொழிகளிலும் பல பிழைகளை பார்க்க முடிகிறது. நாம் நம்மால் முடிந்தவரை தவறுகளை சுட்டிக் காண்பித்தால் மற்றவர்கள் தங்களை திருத்திக்கொள்ள உதவியாயிருக்கும்.

என்னடா இவன் நிறைய பேசுகிறானே ஆனால் இவன் இடுகையிலேயே பிழைகள் இருக்கிறதே என்று நினைகிறீர்களா? அப்படியானால் மறுமொழி எழுதும் போது அதையும் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

4 கருத்துகள்:

  1. தன்னடக்கமானப் பதிவு மட்டுமல்ல.. இரண்டு மொழிகளிலும் அரைகுறையாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு ரொம்பவும் அவசியமானப் பதிவும் கூட.

    தமிழில் உள்ள ழ, ள உச்சரிப்பில் ததிங்கினத்தோம் போட்டுக்கொண்டிருந்த எனக்கு மற்றவர்கள் அதைத் திருத்தியபிறகுதான் தெரிந்தது அந்த உச்சரிப்பில் உள்ள அழகு.

    தமிழையும் காப்பாற்றுவோம்! என்று தலைப்பு வைத்து முதன் முதலில் தமிழுக்காக எழுதியப் பதிவு அருமை.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. comment கொடுக்கும் இடத்தில் உள்ள word verification- ஐ எடுத்து விடவும்.

    பதிலளிநீக்கு
  3. //நாம் நம்மால் முடிந்தவரை தவறுகளை சுட்டிக் கான்பித்தால் //

    காண்பித்தால்

    வாழ்த்துக்கள்!

    ஓகை நடராஜன்.

    பதிலளிநீக்கு