செவ்வாய், 16 நவம்பர், 2010

என்கவுன்டர்

என் நண்பர்களை சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில் சமீபத்தில் நடந்த மோகன்ராஜ் என்கவுன்டர் பற்றிய செய்தி ஒரு சூடான விவாதத்திற்கு எங்களை இட்டுச் சென்றது. இந்த என்கவுன்டர் சரிதான் என்று நானும் இல்லை என்று என் நண்பரும் விவாதித்தோம்.

அவர் பார்வையில் எந்த ஒரு குற்றதிற்கும் மரணம் என்பதை தண்டனையாக தரக்கூடாது என்பதுதான். தூக்கு தண்டனைகூட சட்டமேயானாலும் அது திட்டமிட்டு செய்யப்படும் கொலைதான். மரணம் என்பது இயற்கையை தவிர வேறு எந்த வகையிலும் நடந்தாலும் அது கொலையேயாகும். ஒரு மனிதன் தனக்கு நேர்ந்த இழப்பிற்காகவோ அல்லது கொடுமைக்காகவோ தன்னிலை மறந்து கொலை செய்து விட்டால் அதை சட்டம் மன்னிக்காவிட்டால்கூட நாம் சில சமயங்களில் மன்னித்து விடுகிறோம். பல நாடுகளில் இந்த மரண தண்டனையை தடை செய்து விட்டாலும் நாம் என்கவுன்டர் என்ற பெயரில் செய்து வருவது மனித நேயமற்ற செயலாகும்.

இவர் கூறியதில் எந்த ஒரு கருத்தையும் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. சட்டம் என்பதை மனிதனுடைய நாகரீகத்தின் ஒரு பகுதியாகவே நான் பார்க்கிறேன். குற்றம் செய்பவர்களிடத்திலிருந்து மற்றவர்களை காப்பாற்றவும் மனிதனை நெறிப்படுத்தி அவனை நல்வழி நடத்தவே சட்டம். எந்த ஒரு குற்றத்திற்கும் அதன் விளைவையும் இழப்பையும் பொறுத்து தண்டனையின் கடுமை இருக்கிறது. அப்படியானால் மோகன்ராஜின் செயலுக்கு மரணத்தைவிட வேறு எந்த தண்டனையை தருவது? அவர் என்ன போக்குவரத்து விதிகளையா மீறிவிட்டார் ஐம்பது நூறு என்று அபராதம் விதிப்பதற்கு.

இது போன்ற தண்டனைகள் நிச்சயமாக கொடூரமான குற்றங்களை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

2 கருத்துகள்:

  1. //குற்றம் செய்பவர்களிடத்திலிருந்து மற்றவர்களை காப்பாற்றவும் மனிதனை நெறிப்படுத்தி அவனை நல்வழி நடத்தவே சட்டம். எந்த ஒரு குற்றத்திற்கும் அதன் விளைவையும் இழப்பையும் பொறுத்து தண்டனையின் கடுமை இருக்கிறது//

    நல்லக் கருத்து.

    குற்றங்களைத் தடுக்கக் கடுமையானச் சட்டங்கள் வேண்டும் என்று அனைவரும் விரும்பும் போது, மரண தண்டனை வழங்குவதைக் கொலையாகக் கருதுவது அர்த்தமற்றது.

    என்னைப் பொறுத்தவரை, மிருக குணம் கொண்ட ஒருவனை வதம் செய்தது சரிதான்.

    குழந்தைகள் மேல் பெற்றோர்கள் கை வைப்பதே தவறு என்கிறபோது அவர்களைக் கடத்திக் கொலை செய்வது மன்னிக்க முடியாத செயல்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெகன்!

    உங்கள் பதிவை தமிழ்மணம், இன்ட்லியில் இணைத்துக்கொள்ளுங்கள்.

    www.tamimanam.net
    http://ta.indli.com
    இந்த லிங்கில் போய் உங்கள் இடுகையைப் பதிவு செய்யுங்கள். இதில் இணைத்தால் உங்கள் பதிவை நிறையப் பேர் பார்ப்பார்கள்.

    பதிலளிநீக்கு